செய்திகள்
நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடீங்களே….அசின் தவறவிட்ட 3 சூப்பர் ஹிட் படங்கள்
மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அசின். இந்த படம் வெற்றி பெற்றதால் அசினுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

இயக்குனர் ஹரி இயக்கத்தில், விக்ரம் – த்ரிஷா நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம், சாமி. இதில் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க வைக்க முதலில் அசினை அணுகியுள்ளார்கள். அப்போது அசின் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் அந்த வாய்ப்பு திரிஷாவுக்கு சென்றது.
இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தில் பூமிகா கதாபாத்திரத்தில் முதலில் அசின் நடிப்பதாக இருந்தது. ஆனால் இரண்டாவது நாயகி போன்ற ரோலில் நடிக்க விருப்பம் இல்லை எனக்கூறி அப்படத்தில் இருந்து விலகினார்.
அசின் தவறவிட்ட படங்களில் 3 படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. விஷ்ணு வரதன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2007ம் ஆண்டு வெளியான திரைப்படம் பில்லா. இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு அசினுக்கு கிடைத்தது. ஆனால் பிகினி டைப்பில் ட்ரெஸ் போடமாட்டேன் என கூறி, இந்த படத்தில் இருந்து அதிரடியாக வெளியேறியுள்ளார்.
