செய்திகள்
அமெரிக்காவில் நடிகர் விஜய் – வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் சங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு ‘விஜய் 68’ உருவாக உள்ளது.
இதில் விஜய் இரட்டை சகோதரர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இப்படத்தின் போட்டோ ஷூட் காட்சிகளை எடுப்பதற்காக சென்னையில் இருந்து புறப்பட்ட நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் இன்று அதிகாலை அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு சென்றடைந்தனர்.
அங்கு விமான நிலையத்தில் நடிகர் விஜய்யை ரசிகர் எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
