செய்திகள்
விஜய் வழியில் விஷால்?.. தேவி அறக்கட்டளை – மாணவர்களுக்கு விழா எடுக்க ஆயத்தமாகிறாரா விஷால்?
சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும், தொகுதி வாரியாக சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்களையும், காசோலைகளையும் வழங்கி கௌரவித்தார் நடிகர் விஜய்.
சுமார் 12 மணி நேரம் இடைவெளி இன்றி கடும் சிரமத்திற்கு மத்தியில் விருதுகளை மாணவர்களுக்கு கொடுத்து அவர்களோடு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார் அவர். இது நிச்சயம் அவருடைய அரசியல் வருகையை தான் குறிக்கின்றது என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷால் அவர்களும் இதுபோன்ற ஒரு விழாவை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஷால் ஏற்கனவே “தேவி அறக்கட்டளை” என்ற நிறுவனத்தின் மூலம் ஏழை எளிய மாணவ, மாணவிகளின் மேல் படிப்பிற்கு உதவி வருகிறார்.
இவருடைய அறக்கட்டளையின் கீழ் சுமார் 250க்கும் அதிகமான மாணவர்கள் படித்து பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு தேவி அறக்கட்டளை மூலம் ஒரு விழா நடத்த அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
