செய்திகள்
“அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே” வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி..!!
அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் சுவாரஸ்யமான பல கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது நடிகர் அஜித் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமைச்சர் துரை முருகன், ‘அஜித்னா யாரு?’ என கேட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தை யார் என கேட்டது ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அஜித் என்றால், உங்கள் தலைவர் பாராட்டு விழாவில் சம்பவம் செய்தவர்’ என்று அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி அஜித்துக்கு ஆதரவாக தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். “அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே ? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன் , மறுமவன் இப்படி எதுவுமில்லாமே யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமே சொந்த முயற்சியில மேல வந்தவரு… அவரையெல்லாம் எப்பிடி தெரியும்? ” என விளாசியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
அஜித்துனா யாரு? கேட்கமாட்டாங்களா பின்னே ? பெரிய புள்ளி யாருக்காச்சும் மகன், பேரன் , மறுமவன் இப்படி எதுவுமில்லாமே யாரும் தூக்கி விடாம யாரையும் கெடுக்காமே சொந்த முயற்சியில மேல வந்தவரு… அவரையெல்லாம் எப்பிடி தெரியும்? #thala #Ajithkumar𓃵
— Kasturi (@KasthuriShankar) August 17, 2023
