செய்திகள்
மலையாள படத்துக்கு ஓகே சொன்ன திரிஷா.. அப்போ விடாமுயற்சிக்கு குட் பையா? – குழம்பும் ரசிகர்கள்!
பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிப்பில் அஜித் அவர்களின் அடுத்த திரைப்படமாக விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகை திரிஷா அஜித்திற்கு ஜோடியாக களமிறங்குவார் என்ற தகவல்கள் முன்பே வெளியானது.
முதல் முதலில் இந்த விடாமுயற்சி திரைப்படம் நயன்தாராவின் கணவரும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அப்பொழுது ஏற்பட்ட சில சிக்கல்களாலும், காலதாமதத்தினாலும் இந்த திரைப்படம் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு சுமார் ஓர் ஆண்டு காலம் ஆகியும் இன்னும் இந்த திரைப்படம் ஷூட்டிங் வரை நகரவில்லை. அஜித்குமார் வெளிநாட்டில் இந்த படத்திற்காக பயிற்சி எடுத்து வருவதாகவும், மகிழ் மற்றும் அஜித்குமார் ஆகிய இருவரும் இந்த கதை குறித்து டிஸ்கஸ் செய்து வருவதாகவும் மட்டுமே தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த திரைப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, அட்வான்ஸ் அளிக்கப்படாத நிலையில் திரிஷா உள்ளார் என்றும், இந்த படத்தில் இருந்து அவர் விலக அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படு கிறது. மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸ் படத்தில் திரிஷா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இந்த அதிகாரப்பூர் தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார்.
விரைவில் அந்த பணிகளுக்கு செல்ல இருப்பதால் திரிஷா அஜித்தின் விடாமுயற்சி படத்திலிருந்து விலக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
