செய்திகள்
இருளுக்குள் ஒரு பயணம்.. மாலை வெளியாகும் ஒரு Surprise வீடியோ – அருள்நிதியின் டிமான்டி காலனி 2!
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியது தான் டிமான்டி காலனி. அருள்நிதியின் நேர்த்தியான நடிப்பு இந்த படத்தின் வெற்றியை இன்னும் உறுதிப்படுத்தியது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் சுமார் 8 ஆண்டுகள் கழித்து தற்பொழுது இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெகு சீக்கிரம் தயாராகி வருகிறது. படக்குழு வெளியிட்டுள்ள தகவலின்படி இன்று மாலை 5.01 மணிக்கு இந்த படத்தில் இருந்து ஒரு வீடியோ வெளியாக உள்ளது.
அருள்நிதி நடிக்கும் இந்த திரைப்படத்தையும் ஞானமுத்து தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய சுப்பிரமணியன் மற்றும் ஆர்சி ராஜ்குமார் தயாரிப்பில், பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையில் விரைவில் இந்த படம் திரையில் வெளியாக உள்ளது.
அருள்நிதி திரைவரலாற்றில் மிகவும் முக்கியமான திரைப்படங்களில் டிமான்டி காலனி திரைப்படமும் ஒன்று. ஆகவே தற்போது வெளியாகவுள்ள அதன் இரண்டாம் பாகம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
