Connect with us

மிரளவைக்கும் மேக்கிங் வீடியோ.. பயமுறுத்தும் அருள்நிதி – வெளியான டிமான்டி காலனி 2 அப்டேட்!

செய்திகள்

மிரளவைக்கும் மேக்கிங் வீடியோ.. பயமுறுத்தும் அருள்நிதி – வெளியான டிமான்டி காலனி 2 அப்டேட்!

விக்ரம் நடிப்பில் வெளியான “கோப்ரா” மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்” ஆகிய படங்களை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் தான் அஜய் ஞானமுத்து. முதல் முதலில் இவர் இயக்கிய திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான “டிமான்டி காலனி” என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த இவர், தற்பொழுது தமிழ் சினிமாவில் நல்ல பல திரைப்படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் சுமார் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அருள் நிதியை வைத்து டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்துள்ளார்.

நேற்று படக்குழு வெளியிட்ட ஒரு வீடியோவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதாக பட குழு அறிவித்துள்ளது. மேலும் த்ரில்லர் படமான இந்த படம் உருவான விதத்தை, ஒரு சிறப்பு வீடியோவாக வெளியிட்டு மக்களுக்கு சமர்ப்பித்துள்ளனர் பட குழுவினர்.

நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர் மற்றும் மூத்த நடிகர் அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து வருகின்றனர். தற்பொழுது வெளியான டிமான்டி காலனி 2 படத்தின் மேக்கிங் வீடியோ டிரண்ட் ஆகி வருகிறது.

More in செய்திகள்

To Top