Connect with us

படம் முழுக்க கடலில் தான்.. யோகி பாபு நடிப்பில் உருவாகும் Boat – வெளியான சுவாரசிய தகவல்!

செய்திகள்

படம் முழுக்க கடலில் தான்.. யோகி பாபு நடிப்பில் உருவாகும் Boat – வெளியான சுவாரசிய தகவல்!

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் பிரபல இயக்குனர் சங்கர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் தான் இம்சை அரசன் 23ம் புலிகேசி. இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகப்பெரிய புகழ்பெற்றவர் தான் இயக்குனர் சிம்புதேவன்.

அதைத்தொடர்ந்து அவருடைய இயக்கத்தில் வெளியான அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் மற்றும் தளபதி விஜயின் நடிப்பில் வெளியான புலி உள்ளிட்ட அனைத்து திரைப்படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இவர் மீண்டும் ஒருமுறை வடிவேலு அவர்களை வைத்து இம்சை அரசன் 24ம் புலிகேசி திரைப்படத்தை இயக்கிய பொழுதுதான், அதில் ஏற்பட்ட பிரச்சனையின் மூலமாக வடிவேலுவுக்கு சில வருடங்கள் ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்பொழுது அவர் இயக்கிவரும் அடுத்த திரைப்படம் தான் Boat. ஏற்கனவே இந்த திரைப்படம் பல வருடங்களுக்கு முன்பே பேச்சுவார்த்தையில் இருந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. நெய்தல் நதியின் கதையை கூறும் ஒரு திரைப்படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

பிரபல நடிகர் யோகி பாபு இதில் முன்னணி கதாபாத்திரம் நேற்று நடித்து வருகின்றார். இந்நிலையில் ஏற்கனவே இந்த படம் பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கடலில் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக பல மீனவர்களுடைய உதவிகளையும், கடல் சார் அறிவியலாளர்கள் பலரின் உதவியும் சிம்புதேவன் நாடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடலின் ஓட்டம் காற்றினுடைய திசை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது பட குழுவிற்கு மிக சவாலாக இருந்து வருகிறது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

More in செய்திகள்

To Top