செய்திகள்
“பெண்களை பாலியல் ரீதியாக சீண்டியவருக்கு நேரில் சென்று வாழ்த்து” – வைரமுத்து பிறந்தநாள்.. சின்மயி காட்டமான ட்வீட்!
நேற்று கவிப்பேரரசு வைரமுத்து தனது 70வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், அவருடைய வீட்டிற்கு நேரடியாக சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள். இந்த செய்தி கண்டு மிகவும் கோபம் அடைந்துள்ளார் பிரபல பாடகி சின்மயி.
பல பெண்களை தனது பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகிய ஒரு மனிதனுக்கு ஒரு முதல்வர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அந்த மனிதனை எதிர்த்து புகார் அளித்த எனக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
பிரிஜ் பூஷன் துவங்கி வைரமுத்து வரை அனைவரும் எளிதில் தப்பித்து விடுகிறார்கள், காரணம் அரசியல்வாதிகள் இவர்களை பாதுகாத்து வருகிறார்கள். வைரமுத்து திமுகவுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு தன்னால் பாதிக்கப்பட்ட பெண்கள் பேச முடியாதவாறு அச்சுறுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பேசும் அனைத்து பேச்சுகளுக்கும், பெண்களின் பாதுகாப்பிற்காக இருக்கும், ஆனால் வைரமுத்துவின் தலைப்பைக் கொண்டு வரும்போது அவர்கள் அனைவரும் அமைதியாகிவிடுவார்கள் என்று காட்டமாக அந்த பதிவில் கூறியுள்ளார்.
