Connect with us

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர்.. பணத்தை ஏமாற்றியதாக வெளிநாட்டு வாழ் இந்தியர் புகார் – என்ன நடந்தது?

செய்திகள்

பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர்.. பணத்தை ஏமாற்றியதாக வெளிநாட்டு வாழ் இந்தியர் புகார் – என்ன நடந்தது?

திரை விமர்சகராகவும், பிரபல தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருபவர் தான் ரவீந்தர். அண்மையில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை இவர் திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்ததே. திருமணமான நாள் முதல் இருவரும் தங்கள் வாழ்வை சந்தோஷமாக கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் வாழும் இந்தியரான விஜய் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ரவீந்தர் மீது ஒரு பரபரப்பு புகாரை கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கிளப் ஹவுஸ் என்ற செயலின் மூலம் ரவீந்தர் தனக்கு அறிமுகமானதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் சில கால நட்புக்கு பிறகு ஒரு படத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க 20 லட்சம் தேவைப்படுவதாகவும் ரவீந்தர் கூறியதாக விஜய் தெரிவித்துள்ளார். அதன் பிறகு விஜய் தன்னிடம் இருந்த 15 லட்சம் ரூபாய்யை இரண்டு தவணைகளாக ரவீந்திரனுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரவீந்தர் அந்த பணத்தை திருப்பி தராமல் காலத்தை இழுத்தடித்து வருவதாகவும், இது குறித்த அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் விஜய் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Continue Reading
You may also like...

More in செய்திகள்

To Top