செய்திகள்
‘ஜெயிலர்’ படத்தை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு…என்ன காரணம்??
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
ஜெயிலர் படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் ஜெயிலர் படத்தை தடை செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் ‘ஜெயிலர்’ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால், இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும். இந்த படத்திற்கு வழங்கப்பட்ட யு/ஏ சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
