செய்திகள்
தனுஷ் 50.. பிரம்மாண்ட அரங்க அமைப்போடு துவங்கிய ஷூட்டிங் – இசையமைப்பாளர் அவர் தானா?
தனுஷ் அண்மையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் தனது பணிகளை முடித்துவிட்டு மொட்டை போடு கொண்ட சம்பவம் அனைவரும் அறிவோம். இதை தொடர்நது அவருடைய நடிப்பில் உருவாக உள்ள அடுத்த படம் குறித்த தகவல் நேற்று வெளியானது.
தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள 50வது படம் அது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பா. பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் தனது 50வது படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். நேற்று பூஜையுடன் இந்த படத்திற்கான பணிகள் துவங்கியுள்ளது.
சென்னை ஆதித்யராம் அரங்கில் இந்த படத்திற்கான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகின்றது. சுமார் 100 நாட்களுக்கும் மேல் அங்கு படப்பிடிப்பு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அச்சுஅசலாக ராயபுரம் பகுதியை போன்ற ஒரு மிகப்பெரிய செட் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பல முன்னை நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடிக்கவுள்ள நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பல முன்னை நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடிக்கவுள்ள நிலையில், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல SUN PICTURES கலாநிதி மாறன் இந்த படத்தை தயாரித்து வழங்கவுள்ளார்.
