செய்திகள்
தனுஷ் குரல் மாவீரன் படத்தில் இல்லை.. வெளியான தகவல் – ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்!
மடோன் அஸ்வின் இயக்கத்தில் ஜூலை 14ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் மாவீரன். பத்திரிகை துறையில் காமிக் ஆர்டிஸ்டாக பணிபுரியும் ஒரு பணியாளராக இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தோன்றியுள்ளார்.
வெளியான ட்ரைலரின் அடிப்படையில் அவருக்கு அவ்வப்போது மேலிருந்து கேட்கும் ஒரு குரலைக் கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார் என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மேலிருந்து அசிரீதியாக வரும் கடவுளின் குரலுக்கு நடிகர் தனுஷ் தான் குரல் கொடுத்துள்ளார் என்ற தகவல்கள் வைரலாக பரவியது.
ஆனால் தற்பொழுது கிடைத்திருக்கும் தகவலின்படி தனுஷ் மாவீரன் திரைப்படத்தில் எந்த விதத்திலும் பங்கேற்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. இது உண்மையிலேயே அவருடைய ரசிகர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் ஏமாற்றம் என்று தான் கூற வேண்டும். ஆனால் லியோ திரைப்படத்தில் தனுஷ் நடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் மாவீரன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயனின் நாயகியாக இந்த படத்தில் அதிதி சங்கர் நடிக்க, வெகு நாட்கள் கழித்து மீண்டும் நடிக்கும் நடிகை சரிதா இந்த படத்தில் அவருடைய தாயாக நடித்துள்ளார். முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக களம் இறங்குகிறார் இயக்குனரும் நடிகருமான மிஸ்க்கின்.
