செய்திகள்
அப்போ சிறப்பான தரமான சம்பவங்கள் இருக்கு.. முன்னணி நடிகர்களுடன் இணையும் பிரபல இயக்குனர்!
கார்த்திக் தங்கவேல் கடந்த 2018ம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் “அடங்கமறு” திரைப்படத்தின் மூலம் பிரபலமான ஒரு இயக்குனர் இவர். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் தனது திரைப்பட பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.
அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய அவர் அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களை இயக்க தேவையான பணிகள் நடந்து வருவதாக அவர் கூறினார். தன்னுடைய அடுத்த திரைப்படமும் ஜெயம் ரவியுடன் நிகழ அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், அதே போல பிரபல நடிகர் அருண் விஜய் அவர்களுக்கும் ஒரு கதையை தற்பொழுது கூறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் தற்பொழுது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்து வரும் முன்னணி நடிகர் சிம்பு அவர்களுக்கும் தான் ஒரு கதையை கூறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அடங்க மறு வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் மூன்று முக்கிய கதாநாயகர்களோடு விரைவில் இணை வருகிறார் கார்த்திக் தங்கவேலு.
இந்த படங்கள் குறித்த அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மூன்று நடிகர்களில் முதலில் யார் படத்தை நான் இயக்க உள்ளேன் என்பது அடுத்த மாதம் தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
