செய்திகள்
“தம்பி கேட்டுவிட்டார்.. அண்ணன் அதை நிச்சயம் செய்வேன்” – சிவகார்த்திகேயன் குறித்து பேசிய மிஷ்கின்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற ஜூலை மாதம் 14ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ள திரைப்படம் தான் மாவீரன். மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மண்டேலா என்ற திரைப்படத்தை இயக்கி அதன் மூலம் புகழ்பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் வரும் மிஷ்கின் அவர்கள் மிக நேர்த்தியாக நடித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய மிஸ்கின், தம்பி சிவகார்த்திகேயன் எனது இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அது நூறு சதவீதம் விரைவில் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏனென்றால் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தன்னை மிகவும் கவர்ந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருடைய ஸ்டைல் திரைப்படங்களை, என்னுடைய ஸ்டைல் திரைப்படங்களோடு இணைத்து நிச்சயம் ஒரு புதிய மாதிரியான திரைப்படத்தை, எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக குழந்தைகள் சிவாவை மிகவும் விரும்புவதாகவும் அவர் கூறினார்.
