Connect with us

சும்மா அதுருதா.. மார்க் ஆண்டனி படத்தில் T ராஜேந்தர் – வெளியான மரண மாஸ் அப்டேட்!

செய்திகள்

சும்மா அதுருதா.. மார்க் ஆண்டனி படத்தில் T ராஜேந்தர் – வெளியான மரண மாஸ் அப்டேட்!

பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படத்தில் மாறுபட்ட இரு வேடங்களில் நடிகர் விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகிய இருவரும் நடித்துள்ளனர். அதேபோல பிரபல இயக்குனரும் நடிகருமான செல்வராகவனும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகின்றது, இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வருகிற ஜூலை 15ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில், பிரபல இயக்குனரும், நடிகருமான டி. ராஜேந்தர் “அதிருதா” என்ற பாடலை பாடியுள்ளார். அந்த பாடல் குறித்த ஒரு சிறிய காணொளி ஒன்று தற்பொழுது வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.

விரைவில் இந்த படம் வெளியாகவுள்ள நிலையில் அண்மையில் இந்த படத்திற்கான தனது டப்பிங் பணிகளை விஷால் துவங்கியது. குறிப்பிடத்தக்கது. ஜிகிர்தண்டா டபுல் X, லியோ, மார்க் ஆண்டனி, Game Changer மற்றும் இந்தியன் 2 என்று பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் எஸ்.ஜே சூர்யா.

More in செய்திகள்

To Top