செய்திகள்
திரைப்பட தயாரிப்பாளர் வி.ஏ. துரை காலமானார்
பிதாமகன், கஜேந்திரா, லவ்லி உள்ளிட்ட பல படங்களை தயாரித்த வி.ஏ.துரை உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னதாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவ செலவுக்கு பணமின்றி அவதிப்பட்டதை அறிந்து, நடிகர் பலரும் அவருக்கு உதவி செய்தனர்.
இந்த சிகிச்சையில் அவரது ஒரு கால் அகற்றப்பட்டு இருந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் பகுதியில் இருக்கும் வீட்டில் அவர் வசித்து வந்தார்.
இந்நிலையில் வி.ஏ.துரை நேற்று இரவு 9 மணிக்கு காலமானார். அவருடைய மறைவுக்கு பல முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
