செய்திகள்
ஆமா இவங்க எதுல பாட்னர்னு தெரியலையே.. 3 சூப்பர் நடிகர்கள் காம்பினேஷனில் வெளியாகும் Partner!
இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில், கோலி சூர்ய பிரகாஷ் தயாரிக்கும் புதிய திரைப்படம் தான் “பாட்னர்”. திருமணத்திற்கு பிறகு பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல நடிகர்கள் ஆதி மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் ஆதி, ஹன்சிகா மோத்வானி மற்றும் யோகி பாபு இணைந்து நடிக்க உள்ளனர்.
இந்த பாட்னர் திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக கடந்த 2022ம் ஆண்டு மஹா என்ற படத்தில் நடித்திருந்தார், அதன் பிறகு அந்த ஆண்டே சொஹைல் என்பவரை மணந்து திருமண வாழ்க்கைக்குள் பிரவேசித்தார்.
இந்நிலையில் இந்த 2023ம் ஆண்டு ஹன்சிகா நடிப்பில் பாட்னர் உள்பட 5 திரைப்படங்கள் வெளியாக காத்திருக்கிறது.
