Connect with us

அவரோட பெயர் ஜான்.. வெளியான செகண்ட் சிங்கள் அப்டேட் – மீண்டு வரும் துருவநட்சத்திரம்!

செய்திகள்

அவரோட பெயர் ஜான்.. வெளியான செகண்ட் சிங்கள் அப்டேட் – மீண்டு வரும் துருவநட்சத்திரம்!

முதன் முதலில் கடந்த 2013ம் ஆண்டு நடிகர் சூர்யா அவர்களை கொண்டு அறிவிக்கப்பட்ட திரைப்படம் தான் கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம். ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட சில சிக்கல்களால் படத்தில் இருந்து சூர்யா விலகினார்.

அதன் பிறகு மூன்று ஆண்டுகள் இந்த படம் கிடப்பில் கிடந்த நிலையில் 2016ம் ஆண்டு சியான் விக்ரம் இந்த திரைப்படத்தில் இணைந்தார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஏறத்தாழ 90 சதவீதம் முடிந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏதோ சிக்கல் ஏற்பட்டது என்று கூறப்பட்டது.

கிட்டத்தட்ட ஏழு நாடுகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடந்த நிலையில் படம் அடுத்த கட்டத்திற்கு நகராமல் அப்படியே நின்றது. இந்த நிலையில் தான் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை தானே தயாரித்து வெளியிட முன்வந்து தற்பொழுது அனைத்து கட்ட பணிகளையும் சிறப்பாக செய்து வருகிறார் இந்த படத்தின் இயக்குனரான கௌதம் வாசுதேவ் மேனன்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியான நிலையில் வருகின்ற ஜூலை 19ம் தேதி “His Name is John” என்ற இரண்டாவது சிங்கிள் வெளியாகும் என்ற அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Continue Reading
You may also like...

More in செய்திகள்

To Top