செய்திகள்
இளையராஜா கேட்ட சம்பளத்தால் தலைதெறிக்க ஓடும் தயாரிப்பாளர்கள்
இசைஞானி இளையராஜாவின் இசைக்கு என இப்போது வரை தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். 80களில் கொடிக்கட்டி பறந்த இளையராஜா, 90களின் இடைப்பட்ட காலத்திலிருந்து இவரது இசை பெருமளவில் இடம்பெறாமல் இருந்தது.
சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படம் வெற்றிக்கு பிறகு இளையராஜாவின் மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளது. மேலும் விடுதலை பார்ட் 2 படத்திலும் அவரது இசையை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
விடுதலை படத்தால் இளையராஜா தனது சம்பளத்தை லட்சத்திலிருந்து ஒரடியாக கோடிகளில் உயர்த்தியுள்ளாராம். ஒரு கோடி சம்பளம் கொடுத்தால் தான் பாட்டு போடுவேன், இல்லை என்றால் நடையை கட்டுங்கள் என பல தயாரிப்பாளரிடம் சொல்லியுள்ளாராம். இதனால் தயாரிப்பாளர்கள் விட்டால் போதும் என அங்கிருந்து ஓடி விடுகிறார்களாம்.
விடுதலை படத்திற்கு பின் இளையராஜா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளது, பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தான் விடுதலை படத்திற்கு பின்னர் இளையராஜா வேறு எந்த படத்திலும் கமிட்டாகமல் உள்ளாராம்.
