செய்திகள்
பாக்ஸ் ஆபிஸை தெறிக்க விடும் ஜெயிலர்…ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா..!!
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
படம் வெளியான முதல் நாளில் 19.37 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது வரை 450.80 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. இனி வரும் நாட்களில் 500 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.
