செய்திகள்
“இங்க நான் தான் கிங்”.. மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் சூப்பர் ஸ்டார் – மிரட்டிவிட்ட நெல்சன் திலீப்குமார்!
கடந்த 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களை கண்டுகொள்ளாமல், தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து ஓடிவரும் ஒரு வெற்றிக் குதிரை தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அபூர்வ ராகங்கள் துவங்கி ஜெயிலர் வரை இந்த 48 ஆண்டுகால பயணத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை அவர் கொடுத்துள்ளார்.
உலக அளவில் ஒரு ஸ்டைல் ஐகானாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் படம் குறித்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாக உள்ள நிலையில் நேற்று ஜெயிலர் படக்குழு ஒரு சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது.
இந்த 47 வினாடி ஓடும் வீடியோ ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. “இங்கு நான் தான் கிங்.. நான் வச்சது தான் ரூல்ஸ்.. அந்த ரூல்ச அப்பப்ப மாத்திட்டு இருப்பேன்.. அதை கப்சிப்னு கேட்டுட்டு ஃபாலோ பண்ணனும்”.. என்ற மாஸ் டயலாக்கை கேட்ட ரஜினி ரசிகர்கள் நெல்சனை பெரிய வகையில் கொண்டாடி வருகின்றனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையில் ஏற்கனவே காவாலா பாடல் உலக அளவில் ட்ரெண்டாகி வரும் நிலையில், விரைவில் ஜெயிலர் திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கள் பாடலான Hukum வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
