செய்திகள்
முன்பதிவில் மட்டுமே இத்தனை கோடியா?? மாஸ் காட்டும் ஜவான்
இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா, வில்லனாக விஜய் சேதுபதி, காமெடி நடிகர் யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
ஜவான் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
ஜவான் படத்திற்கான ப்ரீ புக்கிங் துவங்கிய நிலையில் இதுவரை மட்டுமே உலகளவில் ரூ. 25 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது ஜவான் படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு என தெரிவிக்கின்றனர்.
