செய்திகள்
எல்லாம் ரெடியா? நாளை காலை வெளியாகும் ஜவான் பட Preview.. தமிழில், தளபதி விஜய் வெளியிட அதிக வாய்ப்பு!
பிரபல இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக இருந்து 2013ம் ஆண்டு ஆர்யா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் “அட்லி”. கடந்த 10 வருட திரை பயணத்தில் அவர் இதுவரை நான்கு திரைப்படங்களை இயக்கி வெளியிட்டுள்ளார்.
மேலும் தனது A for Apple என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இரண்டு திரைப்படங்களை தயாரித்தும் வெளியிட்டுள்ளார். தெறி, மெர்சல் மற்றும் பிகில் என்று தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களை தளபதி விஜய் அவர்களை கொண்டு மாபெரும் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது பாலிவுட் பக்கம் அவருடைய கவனம் திரும்பி இருக்கிறது.
பாலிவுட் பாஷா என்று அழைக்கப்படும் சாருக் கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் என்ற திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் நாளை ஜூலை 10ம் தேதி காலை பத்து முப்பது மணிக்கு இந்த படம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாக உள்ளது. இது இந்த படத்தின் டிரைலராக இருக்கலாம் அல்லது ஒரு சிறிய Previewவாக இருக்கலாம் என்று தற்போது பட குழு அறிவித்துள்ளது.
