செய்திகள்
விக்கி இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்.. முதல் முறை தமிழில் களமிறங்குகிறாரா ஸ்ரீதேவியின் மகள்?
சிம்புவின் “போடா போடி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, தமிழ் சினிமாவில் நல்ல திரைப்படங்களை இயக்கி வெளியிட்டு வருபவர் தான் விக்னேஷ் சிவன். 2015ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான “நானும் ரவுடிதான்” திரைப்படத்தின் போது லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல், திருமணம் வரை சென்றது.
இறுதியாக விஜய் சேதுபதியின் “காத்து வாக்குல இரண்டு காதல்” திரைப்படத்தை இயக்கியதோடு பெரிய அளவில் திரைத்துறை பக்கம் அவர் தலை காட்டாமல் இருந்தார். மேலும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவர் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார்.
இடையில் அஜித்குமாரின் 62வது படத்தை அவர் இயக்கம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பின்னர் அதுவும் மகிழ் திருமேனியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் பிரபல இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது முக்கிய வேடத்தில் நடிகர் மிஷ்கின் இந்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க, தமிழில் முதல் முறையாக ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
