Connect with us

சம்பவம் செய்ய காத்திருக்கும் H.வினோத்.. கமல்ஹாசன் 233 – வெளியான வெறித்தனமான அப்டேட்!

செய்திகள்

சம்பவம் செய்ய காத்திருக்கும் H.வினோத்.. கமல்ஹாசன் 233 – வெளியான வெறித்தனமான அப்டேட்!

உலகநாயகன் கமல்ஹாசன் தற்பொழுது ப்ராஜெக்ட் K, என்ற திரைப்படத்தின் படபிடிப்பு பணிகளில் விரைவில் இணைய உள்ளார். இந்த திரைப்படத்தில் அமிதாபச்சன், பிரபாஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்திய அளவில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக காத்திருக்கிறது இந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்தவுடன் கமல் அடுத்தபடியாக எச். வினோத் இயக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இது கமல்ஹாசனின் 233வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அந்த திரைப்படத்தை குறித்த ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது, கமலஹாசன் 233வது திரைப்படத்தின் பை லைன் “Rise TO Rule” என்ற அப்டேட் வெளியாகி உலகநாயகன் கமலஹாசனின் ரசிகர்களின் மாபெரும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நிச்சயம் இந்த திரைப்படம் அரசியல் சார்ந்து ஒரு திரைப்படமாக இருக்க அதிக அளவில் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படப் பணிகளை முடித்த பிறகு மணிரத்தினம் இயக்கும் ஒரு திரைப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...

More in செய்திகள்

To Top