Connect with us

செப்டம்பரில் முடியு வாய்ப்பு.. காட்டுக்குள் நடக்கும் ஷூட்டிங் – கங்குவா அப்டேட் இதோ!

செய்திகள்

செப்டம்பரில் முடியு வாய்ப்பு.. காட்டுக்குள் நடக்கும் ஷூட்டிங் – கங்குவா அப்டேட் இதோ!

சிறுத்தை சிவா இயக்கத்தில், மதன் கார்க்கியின் வசனங்களில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படம் தான் கங்குவா. தற்பொழுது இந்த படத்தில் இடம் பெறக்கூடிய பீரியாடிக் பகுதிகளுக்கான படபிடிப்பு தற்பொழுது கொடைக்கானலில் அருகே உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் நடந்து வருகிறது.

இந்த படத்தில் இடம்பெறும் பழங்குடி மக்களின் காட்சிகள் தற்பொழுது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இன்னும் 20 நாள் இந்த படப்பிடிப்பு பணிகள் நடக்க உள்ளது, மேலும் ஜூலை 23 சூர்யா அவர்களுடைய பிறந்தநாள் அன்று இந்த படத்தின் ப்ரோமோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற செப்டம்பர் மாதத்தோடு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்து, நடிகர் சூர்யா தனது அடுத்த பட பணிகளுக்கு செல்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா, வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்திற்கு செல்லும் முன்பு, சூரரை போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கார உடன் மீண்டும் ஒருமுறை மற்றொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

கங்குவா திரைப்படம் 2024ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி 2024 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த திரைப்படம் 2டி மற்றும் 3டி தொழில்நுட்பங்களில் ஒரு சேர வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
You may also like...

More in செய்திகள்

To Top