Connect with us

நான்கு ஆண்டுகள் கழித்து மூன்று விருதுகள்.. பன்னாட்டு அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே!

செய்திகள்

நான்கு ஆண்டுகள் கழித்து மூன்று விருதுகள்.. பன்னாட்டு அங்கீகாரம் பெற்ற கண்ணே கலைமானே!

பிரபல நடிகரும், அரசியல் தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் “கண்ணே கலைமானே”. பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை வைத்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் சீனு ராமசாமி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

விவசாயம் படித்து முடித்த ஒரு இயற்கை விவசாயியாக இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பார். அவருடைய நாயகியாக தமன்னா, முக்கிய வேடங்களில் மூத்த நடிகை வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி சுமார் நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது Indo French International Film Festival விழாவில் இந்த 2023ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. அதில் கண்ணே கலைமானே திரைப்படத்திற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு சிறந்த தயாரிப்பாளர் விருதும், சிறந்த நடிகை விருது தமன்னாவிற்கும், சிறந்த நடிகை (சப்போர்ட்டிங் ரோல்) விருது வடிவுக்கரசிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தனது படத்திற்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைத்திருப்பது எண்ணி இயக்குனர் சீனு ராமசாமி மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். திரைப்பிரபலன்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading
You may also like...

More in செய்திகள்

To Top