செய்திகள்
குமரேசன் ரெடி.. வெடிக்கப்போகுது சரவெடி.. விடுதலை பார்ட் 2 – ஆக்சன் ஹீரோ சூரி கொடுத்த அப்டேட்!
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிக மிகப் பெரிய அளவில் ஹிட்டான ஒரு திரைப்படம் தான் விடுதலை. இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு புரட்சியாளரின் கதாபாத்திரத்தை ஏற்று நேர்த்தியாக நடித்திருந்தார்.
அதேபோல இதுவரை குணச்சித்திர வேடங்களில், பல காமெடி வேடங்களிலும் நடித்திருந்த நடிகர் சூரி அவர்கள், முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் கதாநாயகனாக களம் இறங்கி இருந்தார். காதல் காட்சிகளும் இவர் நடிப்பில் வெகு அழகாக உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள செய்தியை நாம் அறிவோம். குறிப்பாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சொந்த மகன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில், தனது பாகத்தை தற்பொழுது நடிக்க துவங்கி உள்ளார் சூரி. அது குறித்த ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மிகப்பெரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
