செய்திகள்
ஆறு மாசம்.. 125 நாள் கடின உழைப்பு.. படப்பிடிப்பை முடித்த லியோ படக்குழு – நெகிழ்ச்சியோடு நன்றி சொன்ன லோக்கி!
தற்போது தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக இருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயின் 67வது திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ். ஆம், சுமார் ஆறு மாத கால பயணத்தில் 125 நாட்கள் ஷூட்டிங் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது லியோ பட குழு தங்களது படபிடிப்பு பணிகளை முடித்துள்ளது.
அடுத்த கட்டமாக இந்த படத்திற்கான VFX அமைக்கும் பணிகளுக்காக லோகேஷ் கனகராஜ் வெளிநாடுகளுக்கு செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில் இந்த படத்திற்காக உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், தனது டீமிற்கும் நன்றி சொல்லி ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தில் தளபதி விஜய், நடிகை திரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரபல இயக்குனர்களும் நடிகர்களுமான ஆக்சன் கிங் அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்ளிட்டோ நடித்துள்ளனர்.
அதேபோல நடிகை பிரியா ஆனந்த், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர், பாபு ஆண்டனி, ஜார்ஜ் மரியான், கதிர் மேடை நாடக கலைஞர் நாயகி மாயா எஸ் கிருஷ்ணன், வையாபுரி, பிரபல மூத்த இயக்குனர்கள் எஸ்.ஜே சூர்யா மற்றும் அனுராக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
உண்மையில் இவ்வளோ பெரிய நடிகர் பட்டாளத்தை கையாண்டு இந்த திரைப்படத்தை முடித்திருக்கும் லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
