செய்திகள்
லியோ படம்..அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை…பிரபல நடிகர் சொன்ன பகீர் தகவல்
ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர். ரூ. 600 கோடியை கடந்து உலகளவில் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த வசூலை விஜய்யின் லியோ படம் கண்டிப்பாக முறியடிக்கும் என திரை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். இன்னும் சிலர் லியோ ரூ. 1000 கோடி கூட வசூல் செய்யலாம் என கூறுகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘லியோ திரைப்படம் கண்டிப்பாக ஜெயிலர் படத்தின் வசூலை முறியடிக்காது. அதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பே இல்லை. அப்படி நடந்தால் என்னுடைய மீசையை நான் எடுத்துவிடுகிறேன்’ என கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
