Connect with us

சென்னை வந்த தல தோனி.. வெளியானது Lets Get Married பட ட்ரைலர் – செம Fun காத்திருக்கு!

செய்திகள்

சென்னை வந்த தல தோனி.. வெளியானது Lets Get Married பட ட்ரைலர் – செம Fun காத்திருக்கு!

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில், பிரபல கிரிக்கெட் வீரர் தோனி முதல் முறையாக தயாரித்து வழங்கும் LGM திரைப்படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், பிரபல நடிகை இவானா, மூத்த நடிகை நதியா, யோகி பாபு, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும், ட்ரைலரும் இன்று மாலை வெளியானது, மேலும் இதனை வெளியிட சென்னை வந்தனர் தல தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்ஷி தோனி. இருவரும் இந்த படத்தின் இசையை வெளியிட்ட பிறகு இந்த படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

மாமியாரை பற்றி தெரிந்துகொள்ள மறுமகள் அவரை ஒரு ட்ரிப் ஒன்றுக்கு அழைத்துச் செல்ல, அதில் நேரிடும் கஷ்டங்களை சமாளித்து எப்படி நாயகனுடன் அவர் சேர்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து கூறவருகின்றது இந்த திரைப்படம்.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இந்த வருடம் உருவாகவுள்ள 5 திரைப்படங்களில் LGM படமும் ஒன்று. ஹரிஷின் டீசல் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

Continue Reading
You may also like...

More in செய்திகள்

To Top