Connect with us

லோகேஷ் கனகராஜின் யூனிவெர்சில் இணைகிறாரா தனுஷ்? பேச்சுவார்த்தை நடத்தும் லியோ படக்குழு!

செய்திகள்

லோகேஷ் கனகராஜின் யூனிவெர்சில் இணைகிறாரா தனுஷ்? பேச்சுவார்த்தை நடத்தும் லியோ படக்குழு!

தளபதி விஜய், நடிகை திரிஷா, எஸ்.ஜே.சூர்யா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின், மூத்த தமிழ் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை பிரியா ஆனந்த், பிரபல நடன இயக்குனர் சண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, ஜார்ஜ் மரியான், கதிர், பிரபல மேடை கலைஞர் மாயா எஸ் கிருஷ்ணன், மடோனா செபஸ்டின், வையாபுரி இன்று ஒரு மாபெரும் நடிகர் பட்டாளமே தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இந்த திரைப்படத்தில் பிரபல இயக்குனர் அனுராக் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளத்தை, லோகேஷ் எப்படி கையாண்டு வருகிறார் என்று நினைத்தாலே மாபெரும் ஆச்சரியமாக இருக்கிறது.

இதற்கு இடையில் லியோ திரைப்படத்தில் ஒரு கேமியோ ரோல் செய்வதற்காக நடிகர் தனுஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நடிகர் தனுஷ் பலமுறை தாதா கதாபாத்திரத்தில் வந்து அசத்தியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆகையால் தனுஷ் நடித்த ஏதோ ஒரு கதாபாத்திரத்தை, லியோ படத்தில் இணைத்து அவரையும் LCUவிற்குள் கொண்டுவர லோகேஷ் ஆயத்தமாகி வருவதாக தெரியவந்துள்ளது. அய்யா லோகேஷ் நீங்க என்னதான் செய்ய பிளான் பண்ணிருக்கீங்க என்று ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.

More in செய்திகள்

To Top