Connect with us

மாஸ்டர் ஒரு பிராண்டாக மாறிவிட்டது.. மகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் – என்ன காரணம்?

செய்திகள்

மாஸ்டர் ஒரு பிராண்டாக மாறிவிட்டது.. மகிழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் – என்ன காரணம்?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த இருவர் காம்பினேஷனால் லியோ திரைப்படம் உருவாகி வருகின்றது.

இந்நிலையில் அந்த திரைப்படம் ஒரு பிராண்டாக மாறி உள்ளதை மேற்கோள்காட்டி மகிழ்ச்சி அடைந்துள்ளார் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள். விம்பிள்டன் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது உலகின் முன்னணி வீரராக திகழ்ந்துவரும் நோவக் ஜோகோவிச் அவர்களை வீழ்த்தியுள்ளார் ஒருவர்.

அவரை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார் 20 வயது நிரம்பிய ஸ்பெயின் நாட்டு வீரர் கார்லோஸ். இந்நிலையில் அவரை பெருமைப்படுத்தும் விதத்தில் விம்பிள்டன் நிறுவனம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அதில் விம்பிள்டனின் மாஸ்டர் இவர் என்று குறிப்பிட்டு விஜயின் மாஸ்டர் படத்தில் வரும் ஒரு போஸ்டரை தழுவி ஒரு புதிய போஸ்டரை உருவாக்கி வெளியிட்டுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ரிட்வீட் செய்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெருமிதம் அடைந்துள்ளார்.

More in செய்திகள்

To Top