செய்திகள்
சூப்பர் ஹிட் வெற்றிப்படமாக மாறிய மாமன்னன்.. மாரி செல்வராஜுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்த உதய்!
மாமன்னன் திரைப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் சற்று டல் அடித்தாலும், அந்த திரைப்படம் ஒரு மாபெரும் வெற்றி திரைப்படம் என்பதை யாராலும் மறுக்க முடியாது . குறிப்பாக படம் பார்த்து விட்டு வெளியே வரும் பலர், வைகைப்புயல் வடிவேலு அவர்களுடைய இத்தனை ஆண்டு கால பயணத்தில் அவரை இப்படியும் பார்த்துவிட முடியும் என்று தாங்கள் சற்றும் நினைத்து கூட பார்த்ததில்லை என்று வியந்து பாராட்டி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின், பாஹத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பை வெகுவாக மக்கள் பாராட்டுகின்றனர். இந்த படத்தின் முதல் நாள் வசூல் பெரிய அளவில் இருந்த நிலையில் நேற்று சனிக்கிழமை விடுமுறை நாளாக இருந்த பொழுதும் இந்த படத்தின் இரண்டாம் நாள் வசூல் சற்று டல் அடித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, நேற்று மாமன்னன் பட குழுவினர் ஒன்றிணைந்து அந்த படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர். இந்த நிகழ்வில் நடிகை கீர்த்தி சுரேஷ், நாயகன் உதயநிதி, இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் ஆஸ்கர் நாயகன் ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கொண்டாட்டங்கள் அத்தோடு நின்றுவிடாமல் மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியினை மாறி செல்வராஜிற்கு கொடுத்துள்ளார் படத்தின் நாயகனும், அரசியல் தலைவருமான உதயநிதி ஸ்டாலின். படத்தின் இயக்குனர்மாரி செல்வராஜுக்கு, உதயநிதி ஸ்டாலின் ஒரு மினி கூப்பர் கார் ஒன்றை இன்ப அதிர்ச்சியாக கொடுத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
