செய்திகள்
ஹீரோவாக களமிறங்கிய மாநகரம் சிறுவன்..!! எந்த படத்தில் தெரியுமா??
2011ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் சாராவுடன் அவரது வகுப்பு தோழனாக நடித்தவர் ஹமரேஷ். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான மாநகரம் படத்திலும் படம் முழுவதும் வரும் கடத்தப்பட்ட சிறுவன் கதாபாத்திரலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் ரங்கோலி என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார்.
பள்ளி மாணவர்களின் காதல் கதையை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கதாநாயகியாக இளம் நடிகை பிரார்த்தனா அறிமுகம் ஆகி உள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
