செய்திகள்
ஒரு நாள் முழுக்க பயிற்சி எடுத்தார் சிவகார்த்திகேயன்.. மாவீரன் பட காட்சி – மனம் திறந்த இயக்குனர்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற ஜூலை 14ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் மாவீரன். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் தோன்றியிருக்கிறார். அதேபோல பிரபல இயக்குனரும், நடிகருமான மிஸ்கின் அவர்களும் ஒரு அரசியல்வாதியின் கதாபாத்திரம் ஏற்று நடித்து அனைவரையும் ஈர்க்க உள்ளார்.
அதிதி ஷங்கர் கதையின் நாயகியாக நடிக்க, நீண்ட நாட்கள் கழித்து களமிறங்கும் மூத்த நடிகை சரிதா, சிவகார்த்திகேயனின் தாயாக இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த ட்ரெய்லர் வெளியாவதற்கு முன்பு, அது குறித்த ஒரு முன்னோட்டம் வெளியானது.
அதில் நீருக்கு அடியில் சிவக்கார்த்திகேயன் கொதித்து கத்துவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அந்த குறிப்பிட்ட காட்சி பற்றி விவரித்துள்ளார் இயக்குனர் மடோன் அஸ்வின். இந்த காட்சியை எடுக்க சிவகார்த்திகேயன் ஒரு நாள் முழுவதும் பயிற்சி எடுத்தார் என்றும். அவருக்கு தண்ணீரைக் கண்டால் சற்று பயம் இருந்தால் இந்த காட்சி எப்படி உருவாகப் போகிறதோ? என்ற கவலையில் அவர் இருந்ததாகவும் கூறினார்.
5 அடி நீரை பார்த்தாலே பயப்படும் சிவகார்த்திகேயன், இந்த ஒரு காட்சிக்காக சுமார் 18 அடி ஆழ குளத்தில் இறங்கி நடித்துள்ளார் என்று கூறிய இயக்குனர், அந்த காட்சி மிக நேர்த்தியாக வந்ததை கண்டு சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியடைந்ததாகவும் அஸ்வின் தெரிவித்தார்.
