Connect with us

இதுவரை உள்ளுரில்.. இன்றும் நாளையும் வெளிநாட்டில் – பிஸியான நேரத்திலும் தீவிர ப்ரோமோஷன் – மாவீரன்!

செய்திகள்

இதுவரை உள்ளுரில்.. இன்றும் நாளையும் வெளிநாட்டில் – பிஸியான நேரத்திலும் தீவிர ப்ரோமோஷன் – மாவீரன்!

சிவகார்த்திகேயனின் திரை வரலாற்றில் மாவீரன் திரைப்படம் ஒரு மிக முக்கியமான திரைப்படமாக மாறி உள்ளது என்றால் அது மிகையல்ல. இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் பெரிய அளவில் நடந்து வருகிறது.

ஷாந்தி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இதுவரை சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடந்து வந்த நிலையில் இன்றும், நாளையும் மாவீரன் பட குழு வெளிநாட்டுக்கு செல்ல உள்ளது.

இன்று மலேசியா செல்லும் மாவீரன் பட குழு நாளை துபாய் செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் தற்பொழுது ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் தனது 21வது திரைப்படத்தில் காஷ்மீரில் படபிடிப்பு பணியில் இருந்து வருகிறார்.

ஆனால் இந்த பிசியான நேரத்திலும் மாவீரன் படத்திற்கான பிரமோஷன் பணிகளுக்காக தொடர்ச்சியாக அவர் பயணத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் டாப் நடிகர்கள் வரிசையில் இருந்து வரும் சிவகார்த்திகேயன் மெல்ல மெல்ல ஒரு பான் இந்தியா ஸ்டார் ஆக மாறி வருகிறார். விரைவில் அவர் பாலிவுட் உலகில் அறிமுகமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது

More in செய்திகள்

To Top