செய்திகள்
வெளியான வெறித்தனமான வீடியோ.. கொண்டாடும் ரசிகர்கள் – மாவீரன் ட்ரைலர் லோடிங்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் மாவீரன், ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து “வண்ணாரப்பேட்டையில” என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஜூலை இரண்டாம் தேதி இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என்று ஒரு அட்டகாசமான வீடியோவை வெளியிட்டு தெரிவித்துள்ளது இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ். நீருக்கடியில் குமுறும் சிவகார்த்திகேயனின் அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது.
வருகிற ஜூலை இரண்டாம் தேதி சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடக்கும் பிரீ ரிலீஸ் நிகழ்வோடு சேர்த்து இந்த ட்ரெய்லர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தை இயக்கிய புகழ்பெற்ற மடோன் அஸ்வின் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இந்த படத்தில் பிரபல நடிகை அதிதி சங்கர் மற்றும் மூத்த நடிகை சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜூலை 14ம் தேதி உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், தற்போது வெளியான ட்ரைலர் அப்டேட் வீடியோ இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
