செய்திகள்
ஒரு பக்க கழுகு, ஒரு பக்கம் நரி – என்னமோ பெரிய சம்பவம் காத்திருக்கு – விஜய் சேதுபதி 50 லோடிங்!
ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ராம் சரண் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.
கடந்த சில வருடங்களாகவே பல படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று நடித்துவரும் விஜய் சேதுபதி தற்பொழுது மீண்டும் கதையின் நாயகனாக களம் இறங்க உள்ளார். விஜய் சேதுபதி நடிக்கும் 50வது திரைப்படமான மகாராஜா குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்க, வில்லன் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் அனுராக் மற்றும் ஒளிப்பதிவாளர் நட்டி நடிக்க உள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் அபிராமி, அருள்தாஸ், பாய்ஸ் படத்தின் மூலம் புகழ்பெற்ற மணிகண்டன், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தின் போஸ்டர் வெளியானதில் இருந்து அது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு செஸ் காயின்களில் ஒன்றில் விஜய் சேதுபதியின் முகமும், இன்னொன்றில் அனுராகின் முகமும் இடம்பெற்றுள்ளது. அதேபோல ஒரு பக்கம் கழுகும் ஒரு பக்கம் நரியின் படமும் இடம்பெற்றுள்ளது. இதனால் கதை எப்படி இருக்கப்போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இந்த படத்தை இயக்குகிறார்.
