Connect with us

மாமன்னன் பட வெற்றி.. குட்டி அதிவீரனுக்கு லேப்டாப் – உதயநிதி போட்ட ட்வீட் வைரல்!

செய்திகள்

மாமன்னன் பட வெற்றி.. குட்டி அதிவீரனுக்கு லேப்டாப் – உதயநிதி போட்ட ட்வீட் வைரல்!

பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடைய நடிப்பும் நல்ல முறையில் பாராட்டப்பட்டு வருகிறது.

குறிப்பாக வடிவேலு அவர்களுடைய நடிப்பு பெரிய அளவில் பாராட்டுகளை பெற்று வருகின்றது. அதே வேலையில் இந்த படக்குழு தங்கள் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர், அதன் பிறகு இயக்குனர் மாரி செல்வராஜிற்கு ஒரு புதிய காரை பரிசளித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் உதயநிதி ஸ்டாலின்.

அதேபோல வடிவேலு அவர்களுடைய வீட்டிற்கு சென்று அவருக்கு ஒரு மிகப்பெரிய மாலை அணிவித்து அவருக்கு நன்று கூறினார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது வெளியிட்டுள்ள உள்ள ட்விட்டர் பதிவில் இந்த மாமன்னன் திரைப்படத்தில் சிறு வயது அதிவீரனாக நடித்து சிறந்ததோர் நடிப்பை வெளிப்படுத்திய தம்பி சூர்யாவை நேரில் சந்தித்து வாழ்த்தினோம்.

மேலும் அவரது கல்விக்கு உதவிடும் வகையில் லேப்டாப் வழங்கி மகிழ்ந்தோம். சூர்யாவின் கல்விக்கும் உயர்வுக்கும் என்றும் துணை நிற்போம் என்று கூறியுள்ளார் அவர்.

More in செய்திகள்

To Top