செய்திகள்
புதிய படங்களை ஓரங்கட்டி வசூல் செய்த மார்க் ஆண்டனி
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜெ சூர்யா நடிப்பில் கடந்த மாதம் 15 ஆம் தேதி வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. படம் வெளியான முதல் நாளில் இருந்தே அதிக வசூலை குவித்து மாஸ் காட்டியது.
இந்நிலையில் படம் வெளியாகி 17 நாட்கள் கடந்துள்ள நிலையில் ‘மார்க் ஆண்டனி’ ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. கடந்த வாரம் சந்திரமுகி 2, இறைவன், சித்தா என மூன்று புதிய படங்கள் வெளியாகி இருந்தாலும் ‘மார்க் ஆண்டனி’ படத்தை பார்க்க ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அண்மையில் விஷால் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் பெரியளவில் வரவேற்பை பெறவில்லை. தற்போது விஷாலின் கம்பேக் படமாக ‘மார்க் ஆண்டனி’ அமைந்துள்ளது.
