Connect with us

நீ வருவாய் என பார்ட் 2.. தளபதி விஜயின் மகன் ஹீரோவா நடிச்சா என் மகள் தான் ஹீரோயின் – இயக்குனர் தகவல்!

செய்திகள்

நீ வருவாய் என பார்ட் 2.. தளபதி விஜயின் மகன் ஹீரோவா நடிச்சா என் மகள் தான் ஹீரோயின் – இயக்குனர் தகவல்!

கடந்த 1999ம் ஆண்டு வெளியான “நீ வருவாய் என” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் ராஜகுமாரன். இந்த படத்தில் பிரபல நடிகர் அஜித்குமார், பிரபல இயக்குனர் பார்த்திபன் மற்றும் நடிகை தேவயானி உள்ளிட்டோர் நடித்திருந்தனர், அது தேவயானி மிகப்பெரிய நடிகையாக வலம் வந்த காலகட்டம்.

நீ வருவாய் என படத்தின் மூலம் ராஜா குமரனுக்கும், தேவயானிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில் அவருக்கு தமிழக அரசு வழங்கும் மாநில விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அந்த படத்திற்குப் பிறகு விண்ணுக்கும் மண்ணுக்கும், காதலுடன், திருமதி தமிழ் உள்ளிட்ட படங்களை அவர் தமிழில் இயக்கியுள்ளார். அதேபோல பூவே உனக்காக, சூரிய வம்சம், சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் நடித்தும் இருக்கிறார்.

இந்நிலையில் அவருடைய நீ வருவாய் என படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக ரசிகர்கள் சிலர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் அந்த திரைப்படத்தில் காலம் அனுமதிக்கும் பட்சத்தில் தளபதி விஜய் அவர்களுடைய மகன் ஹீரோவாகவும் தன்னுடைய மகள் பிரியங்கா ஹீரோயினாவும் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

தனது மகளுக்கு நடிப்பு ஆசை இருக்கின்றது என்று கூறியுள்ள குமரன், விஜயின் மகன் சஞ்சய் மற்றும் தளபதி விஜய் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் இந்த படம் உருவாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

Continue Reading
You may also like...

More in செய்திகள்

To Top