செய்திகள்
போதை பொருள் கடத்தல் வழக்கு – நடிகை வரலட்சுமிக்கு சம்மன்?
போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.
இதற்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- கேரளாவின் விழிஞ்சத்தில் போதைப்பொருள், ஆயுதம் கடத்தல் வழக்கில் கைதான ஆதிலிங்கம், 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உதவியாளராக இருந்தார்.
அதற்கு பிறகு அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், என்.ஐ.ஏ சம்மன் அனுப்பவில்லை என்றும் அவர் கூறினார்.
