செய்திகள்
தொடரும் படங்களின் அணிவகுப்பு.. பட்டையை கிளப்பும் பிரியா பவனி சங்கர் – அடுத்த படம் யார் கூட தெரியுமா?
தமிழில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை துவங்கி இன்று முன்னணி நாயகிகளின் பட்டியலில் இணைந்துள்ளார் பிரியா பவானி சங்கர். கடந்த 2017ம் ஆண்டு ரத்தினகுமார் இயக்கத்தில் வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார் இவர்.
கடந்த ஆறு வருடங்களில் 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த வருகிறார், குறிப்பாக இந்த ஒரு ஆண்டு மட்டும் இவருடைய நடிப்பில் இதுவரை ஐந்து திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. மேலும் டிமான்டி காலனி, இந்தியன் 2 மற்றும் ஜீப்ரா என்ற தெலுங்கு திரைப்படம் வெளியீட்டுக்காக காத்திருக்கிறது.
இந்நிலையில் இந்த வருடத்தில் வெளியாகவுள்ள இவருடைய எட்டாவது திரைப்படமாக ஒரு புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 ஆண்டுகள் கழித்து பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் இணையுள்ள விஷாலின் 34வது திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக களமிறங்குகிறார் பவானி சங்கர்.
நடிகர் விஷாலுடன் பிரியா பவானி சங்கர் இணையும் முதல் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
