செய்திகள்
ப்ராஜெக்ட் K என்றால் என்ன? ஜூலை 20 வரை காத்திருங்கள் – வெளியாக காத்திருக்கும் First Update!
தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்பொழுது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் ப்ராஜெக்ட் கே. இந்த ஆண்டு துவக்கத்திலேயே இந்த திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் பெரும் தொற்று காலகட்டத்தில் ஏற்பட்ட பல சிக்கல்களால் இந்த திரைப்படம் தாமதமானது.
தற்பொழுது இந்த திரைப்படம் விரைவாக உருவாகி வரும் நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் மூத்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் பிரபாஸ் நடித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார்.
பலரும் எதிர்பார்த்த ஒரு தகவலாக சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இணைந்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் அறிவித்தது. பல ஆண்டுகள் கழித்து இந்த திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் ரோலில் உலகநாயகன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் வருகிற ஜூலை 20ம் தேதி அமெரிக்காவில் நடக்கும் ஒரு விழாவில் இந்த படத்தின் Glimpse காட்சி வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் குறித்த தகவல்களும் இந்த நிகழ்வின் போது வெளியிடப்பட உள்ளது. இதற்காக அமெரிக்காவிற்கு நடிகர் பிரபாஸ், தீபிகா படுகோனே மற்றும் உலக நாயகன் செல்ல விருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
