செய்திகள்
ப்ராஜெக்ட் K.. அமெரிக்காவில் நடக்கும் விழாவில் வெளியாகும் டீசர் – உலகநாயகன் ஆட்டம் துவக்கம்!
உலகநாயகன் கமல்ஹாசன் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ள தனது 233வது படத்தின் படப்பிடிப்பு பணிகளுக்கு செல்வதற்கு முன்பாக ப்ராஜெக்ட் K, என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியானது.
இந்த திரைப்படத்தில் சுமார் 50 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உடன் இணைந்து நடிக்க உள்ளார் கமல்ஹாசன். மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
சுமார் 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இது ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக உருவாகி வருகின்றது. தற்பொழுது இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டைட்டில் மற்றும் டீசர் ஆகிய மூன்றையும் வருகிற ஜூலை 20ம் தேதி அமெரிக்காவில் நடக்கும் ஒரு மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே மட்டும் இயக்குனர் நாக அஸ்வின் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
