செய்திகள்
“சமத்துவத்தை வலியுறுத்திய மாரி செல்வராஜ்”.. பூங்கொத்து கொடுத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மக்களிடையேயும், ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது மாமன்னன் திரைப்படம். குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலு அவர்களின் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தை பார்த்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் இப்பட வெற்றியை பட குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
அதேபோல நேற்று முன்தினம் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு ஒரு மினி கூப்பர் காரை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில் தற்போது இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படக் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
