செய்திகள்
“யார் பெரிய ஆளு” முடியை பிடித்து சண்டை போட்ட கவர்ச்சி நடிகைகள்
நம்மில் பலருக்கு பிரபலம் ஆகிவிட்டாலே ஈகோ வந்துவிடும். அதிலும் சீனியர் மற்றும் ஜூனியர் என்றால், அப்படி ஒருசம்பவத்தைத்தான் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு “ஒரு காதலன் ஒரு காதலி” என்ற ஒரு படம் வெளிவந்தது (இப்படி ஒரு படம் வந்துச்சா?) அந்தபடத்தில் ரம்பா, ராய் லட்சுமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அந்த பட சூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர், ரம்பா, ராய் லட்சுமி இருவரையும் படப்பிடிப்புக்கு அழைத்திருக்கிறார். ஆனால் இருவருமே ஒன்றாக வர முடியாது என்று கூறி இருக்கின்றனர்.
பின்னர், ரம்பா, ராய் லட்சுமி இருவருக்கும் இடையே யார் சிறந்த நடிகை என்று பேச ஆரம்பித்து, வாக்குவாதமாக மாறி, கைகலப்பில் போயிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் குடுமிப்பிடி சண்டை போட்டார்களாம். இதனால் படப்பிடிப்பு தளமே ரணகளமாக மாறி இருக்கிறது.
அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த இயக்குனர் எவ்வளவோ முயற்சித்தும் பயனில்லை. பின்னர், வேறு வழி இல்லாமல் இருவரையும் தனித்தனியாக வைத்து படப்பிடிப்பு நடத்தி உள்ளார்.
இந்த செய்தியை தற்போது பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இருந்தாலும் இரு நடிகைகளுக்குள் இதேபோல் ஈகோ வருவதெல்லாம் சாதாரணம் தான்.
இந்த செய்தியை கேட்கும் போது ஒரு வசனம்தான் ஞாபகம் வருகிறது, “ராணுவத்தில் அழிச்சவனை விட ஆணவத்தில் அழிச்சவனே அதிகம் “. அது இவர்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.
