கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் இரு பாகங்களாக வெளியாகி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் கேஜிஎஃப். பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎப் திரைப்படத்தின் மூன்றாவது பாகமும் விரைவில் வெளிவர இருக்கின்றது.
இந்நிலையில் ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் ஃபேன் இந்தியா திரைப்படமாக தமிழ் உள்பட பல இந்திய மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் Salaar. நேற்று இந்த படத்தின் டீசர் வெளியானது, ஏறக்குறைய இந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது கேஜிஎப் திரைப்படத்தை பார்த்த ஒரு எஃபெக்ட் உள்ளதாக பிரபாஸின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதே நேரத்தில் salaar டீசரில் வரும் சில காட்சிகள் KGF படத்தோடு ஒத்துப்போவதால், பிரஷாந்த் நீல் தனக்கென ஒரு யூனிவெர்ஸ் உருவாக்கி வரவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
கேஜிஎஃப் படத்தை இயக்கி வெளியிட்ட பிரசாந்த் நீள் தான் Salaar திரைப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகவுள்ளது salaar படத்தின் முதல் பாகமாகும், ஆகவே இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் உள்ளது உறுதியாகியுள்ளது.
பிரபாஸ் மற்றும் பிரபல மலையாள நடிகர் பிருத்திவிராஜ் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். விரைவில் உலகெங்கும் இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் ஸுருதிஹாசன் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.